Published Date: April 1, 2025
CATEGORY: CONSTITUENCY

கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 89 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 30இலட்சத்து 39ஆயிரம் கல்வி உதவித்தொகை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
தமிழ்நாட்டில் மாணவ மாணவிகள் தங்கு தடை இன்றி உயர்கல்வியை பெறுகின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டம் , தமிழ் புதல்வன் போன்ற மக்கள் நல திட்டங்கள் வெகு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மதுரை மாநகரை பொருத்தவரை மதுரை மத்திய தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான முனைவர் பழனிவேல் தியாகராஜன், தனியார் நிறுவனங்களில் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் பல்வேறு பள்ளி கல்வி மற்றும் உயர்கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மாணவ மாணவிகளை சென்றடைய முன் முயற்சிகள் எடுத்து அதனை நிறைவேற்றி வருகிறார்.
அந்த வகையில் ஹெச் டி எப் சி நிறுவனத்தின் பரிவர்தன் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 89 மாணவ மாணவிகளுக்கு 30இலட்சத்து 39ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையினை இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதில் முதுநிலை கல்வி பயில மாணவர் ஒருவருக்கு ரூபாய்.75000, இளநிலை பொறியியல் மற்றும் சட்டப் படிப்பு பயிலும் 15 மாணவிகள் 3 மாணவர்கள் 18 பேருக்கு தலா 50,000 விதம் 9 லட்சம்மும், இளநிலை கலை அறிவியல் பயிலும் 59 மாணவிகள் 8 மாணவர்கள் என 67 பேருக்கு தலா 30,000 வீதம் 20இலட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், 11,12 மற்றும் டிப்ளமோ பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு தலா 18,000 வீதம் 54ஆயிரம்வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 74 மாணவிகளும், 15 மாணவர்களும் நேரடியாக பயன் பெற்றுள்ளனர். கடந்தாண்டு இதைப்போல் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை சுமார் 42 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, ஹெச்டிஎஃப்சி வங்கியில் நிர்வாகிகள் பாலாஜி, அழகுதுரை பாண்டியன், கிளை மேலாளர் சீனிவாசன் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Media: Tamil Sudar